Congress Maharashtra

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை சூறையாடிய காங்கிரஸ் கட்சியினர் ..

புதிதாக விரிவுபடுத்தப்பட்ட மகாராஷ்டிரா அமைச்சரவையில் மந்திரி பதவி வழங்கப்படாததை அடுத்து  காங்கிரஸ் எம்.எல்.ஏ சங்ராம் தோப்டேவின் ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை புனே மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை சூறையாடினர்.

சுமார் 40 ஆதரவாளர்கள் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, அலுவலகத்திற்குள் இருந்த தளபாடங்களை உடைத்து, காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தோப்டே போர் (Bhor) தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஆவார்.

சிவசேனாவின் குல்தீப் சூடம் கோண்டேவை 2014 மற்றும் 2019 ஆம் சட்டமன்றத் தேர்தல்களில் தோற்கடித்தவர் சங்ராம். மேலும் அவர் 2019 இல் கோண்டேவுக்கு எதிராக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது