CAA Karnataka Muslims

CAA : கொல்லப்பட்ட அப்பாவிகளை கைவிட்ட பாஜக அரசு; 2 கோடி வசூலித்த மக்கள்!

CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது கர்நாடகாவின் மங்களூரு காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பாஜக வில் இருந்தும் கூட மனிதாபிமான அடிப்படையில் அம்மாநில முதல்வரே 10 லட்சம் இழப்பீடு தரப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் அறிவித்த சில மணி நேரத்திலேயே மேலிடத்து உத்தரவோ என்னவோ அப்படியே பல்டி அடித்து இழப்பீடு எல்லாம் தர முடியாது என்று சொன்னது மட்டுமல்லாமல் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட இருவரையும் “கிரிமினல்” என்று நா கூசாமல் அழைத்துள்ளார் பாஜக முதல்வர் எடியூரப்பா.

மங்களூரில் அமைதியாக நடைபெற்று வந்த CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது திடீரென வன்முறை வெடித்தது. (வன்முறை எப்படி வெடித்திருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை) அதனை தொடர்ந்து போலீஸார் நவ்ஷீன் பெங்கிரே(23) மற்றும் ஜலீல் குத்ரோலி (42) ஆகிய இருவரை சுட்டு கொன்றனர்.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக நேரடி வங்கி பண பரிமாற்றம், பொதுமக்கள் வசூல் என பல்வேறு வழிகளின் மூலம் பணம் திரட்டபட்டது. குறிப்பாக பாஜக தலைவரும், முதலமைச்சருமான பி.எஸ் எடியூரப்பா பலியானவர்களின் குடும்பங்களுக்கு என முன்னர் அறிவித்திருந்த இழப்பீடு தொகையான தலா ரூ .10 லட்சம் ருபாய் அறிவிப்பை திரும்ப பெற்று கொண்டதையடுத்து நிதி வசூல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

போலீசாரால் கொல்லப்பட்டவர்களின் குடுமத்தினருக்கு உதவ பல்வேறு அமைப்புகளும், குடிமக்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட முயற்சியால் ரூ .2 கோடிக்கு மேல் வசூல் ஆகியுள்ளது. குத்ரோலி மற்றும் பெங்கிரே குடும்பங்களுக்கு தலா ரூ .25 லட்சம் வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை காயமடைந்த மற்ற போராட்டகாரர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனவும் தெரிவிக்கிப்பட்டுள்ளது.

NAUSHEEN BENGRE (23) AND JALEEL KUDROLI (42)

முன்னாள் முதலமைச்சர்கள் சித்தராமையா மற்றும் எச்.டி. குமாரசாமி ஆகியோர் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சமீபத்தில் இரு குடும்பங்களுக்கும் தலா ரூ .5 லட்சம் அறிவித்தார்.

போலீசாரால் கொல்லப்பட்ட இருவரில் ஒருவரான 42 வயதான ஜலீல் குத்ரோலி என்பவர் தினசரி கூலி தொழிலாளி, 2 குழந்தைகளின் தந்தை. கடந்த டிசம்பர் 19 ம் தேதி, நமாஸ் (தொழுகை) செய்ய தனது வீட்டை விட்டு வெளியேறியபோது, போலீசின் புல்லட் ஒன்று அவரது தலையில் தாக்கியது.

கீழே சாய்ந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலியேயே இறந்தார். சிவில் லிபர்ட்டிஸ் மக்கள் சங்கம் (பி.யூ.சி.எல்) அகில இந்திய மக்கள் மன்றம் (ஏ.ஐ.பி.எஃப்) மற்றும் தேசிய மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு (என்.சி.ஆர்.ஓ) ஆகியோர் கூட்டாக வெளியிட்ட உண்மை கண்டறியும் அறிக்கையின்படி, துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவ இடத்தில எந்தவொரு கும்பலும் இல்லை, அப்படி இருந்தும் கூட போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் என்று உறுதிப்படுத்த பட்டுள்ளது.

நவ்ஷீன் பெங்கிரேவை(23) பொறுத்தவரை, அவர் பணிபுரிந்து வந்த பட்டறையிலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது, துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகியுள்ளார்.