Students Uttar Pradesh

உபி : சமஸ்கிருத பல்கலையில் போட்டியிட்ட 4 சீட்டுகளிலும் ஏபிவிபி படுதோல்வி!

உபி வாரணாசியில் உள்ள சம்பூர்நாடு சமஸ்கிருத விஸ்வவித்யாலயாவில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் பாஜக வின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) இந்திய தேசிய மாணவர் சங்கத்திடம் (என்எஸ்யுஐ) தோல்வியடைந்தது. முன்னதாக 2019 தேர்தலில் 4 சீட்டுகளிலும் வெற்றி பெற்ற ஏபிவிபி தற்போது அனைத்து சீட்டுகளையும் இழந்துள்ளது. வாரணாசி என்பது பிரதமர் மோடியின் சொந்த தொகுதியாகும், கூடுதலாக இந்துத்துவ ஆதித்யநாத் ஆளும் மாநிலமாகவும் இருப்பதால் இது இந்துத்துவாவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றி பெற்ற (என்.எஸ்.யு.ஐ) மாணவர்கள்

ஏபிவிபி படுதோல்வி:

கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்ட முடிவுகளில், காங்கிரசின் மாணவர் பிரிவான என்.எஸ்.யு.ஐ வேட்பாளர் சிவம் சுக்லா மொத்தமுள்ள 988 வாக்குகளில் 485 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தலைவர் பதவியை பெற்றார். சந்தன் குமார் மிஸ்ராவும் 554 வாக்குகளுடன் துணைத் தலைவர் பதவியை பெற்றார். அதே போல் பொதுச் செயலாளர் பதவியை அவ்னிஷ் பாண்டேவும், நூலகர் பதவியை ரஜினிகாந்த் துபேவும் முறையே வென்றனர்.

இந்த வெற்றியை குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் மாணவர்களை வாழ்த்தி கருத்து பதிவு செய்துள்ளார்.