Crimes against Children Hindus Hindutva Lynchings West Bengal

மே.வங்கம்: ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட மறுத்த 10 வயது சிறுவன் மஹாதேவ் மீது பாஜக உறுப்பினர் தாக்குதல் !

திங்கள்கிழமை பிற்பகல் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட மறுத்ததற்காக பாஜக உறுப்பினர் ஒருவர் 10 வயது சிறுவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புலியாபாராவில் உள்ள தேநீர் கடை வழியாக சிறுவன் சென்று கொண்டிருந்த போது, அக்கடை உரிமையாளர் சிறுவனை தாக்கியுள்ளார். இது குறித்து டெலிகிராப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் அண்மையில் தனது தாயை இழந்தவர். நான்காம் வகுப்பு மாணவரான மகாதேவ் சர்மா பல காயங்களுடன் ரானகட் துணைப்பிரிவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஊர்மக்கள் கொந்தளிப்பு:

இந்த சம்பவம் உள்ளூர்வாசிகளை கோபப்படுத்தியது, குற்றம் சாட்டப்பட்ட தேநீர் கடை உரிமையாளர் மகாதேப் பிரமானிக் என்பவரை பிடித்து ஊர் மக்கள் அடித்து உதைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரமானிக் கைது செய்யக் கோரி NH12 சாலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தப்பி ஓட்டம்:

அடிதடிக்கு மத்தியில் பாஜக பெண்கள் பிரிவின் உள்ளூர் தலைவரான மிது பிரமானிக்கின் கணவர் (டீக்கடை உரிமையாளர்) பிரமானிக் தப்பி ஓடிவிட்டார். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கினர், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மக்களின் முற்றுகை போராட்டத்தை போலீசார் பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் போராட்டக்காரர்களுக்கு உறுதியளித்தனர்.

சிறுவன் தாக்கப்பட்டது ஏன் ? :

சிறுவன் த்ரினாமுல் காங்கிரஸ் ஆதரவாளரான தச்சரின் மகன் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். “சிறுவன் பிரமானிக்கின் தேநீர் கடை வழியாக சென்று கொண்டிருந்தான். அப்போது பிரமானிக் அவரை அழைத்து, சிறுவனின் தந்தையை திரிணாமுல் கட்சியின் தீவிர செயற்பட்டாளர் என்பதால் சிறுவனை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார், ” என்று சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி ஒருவர் கூறுகிறார்.

“அவர் சிறுவனை அச்சுறுத்தத் தொடங்கினார், மேலும் அவர்” ஜெய் ஸ்ரீ ராம் “என்று கோஷமிட கட்டாயப்படுத்தினார், அதை சிறுவன் மறுத்துவிட்டார்,” என்று அந்த சாட்சி மேலும் கூறினார்.

ஒரு சில கிராமவாசிகள் உதவிக்கு விரைந்து செல்லும் வரை பிரமானிக்கால் சிறுவன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியில் இருந்து மீளாத சிறுவன்:

இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியாத நிலையில் இருந்த சிறுவன் ஷர்மா, மருத்துவமனை படுக்கையிலிருந்து கூறினார்: “அவர் (பிரமானிக்) என்னை ‘ ஜெய் ஸ்ரீ ராம் ’என்று கோஷமிட வற்புறுத்தினார், என் தந்தையை இழிவாக பேச துவங்கினார், நான் ஜெய் ஸ்ரீ ராம் கூற மறுக்கவே, அவர் என்னை தாக்க துவங்கினார், என்னை அறைந்தார், பின்னர் என்னை உதைத்தார். அதிர்ஷ்டவசமாக, சில உள்ளூர்வாசிகள் உதவ விரைந்தனர். ” என்கிறார் பாதிக்கப்பட்ட சிறுவன்.

“சிறுவன் அதிர்ச்சியில் இருக்கிறான், ஆனால் மருத்துவ ரீதியாக உடல் சீராக உள்ளது” என்று மருத்துவர் கூறினார்.

பாஜக கொடூரமானது:

“சில கிராமவாசிகள் சிறுவனை சுயநினைவை இழந்த நிலையில் மீட்டு எனக்குத் தெரிவித்தனர். “நான் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். பாஜக எவ்வளவு கொடூரமானதாக இருக்க முடியும் என்பதை இந்த சம்பவம் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தாயை இழந்த ஒரு குழந்தையை கூட அவர்கள் விடவில்லை என்பது கற்பனைக்கும் எட்டாதது. ” என்கிறார் உள்ளூர் திரிணாமுல் இளைஞர் பிரிவுத் தலைவர் பீட்டர் முகர்ஜி.