BJP Kashmir

ஜம்மு: பாஜகவின் ஐடி பிரிவு தலைவராக இருந்த லஷ்கர் தீவிரவாதி கைது!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று தேடப்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி தாலிப் உசேன் பிடிபட்டார். அவர் பாஜக உறுப்பினராக தீவிரமாக செயல்ப்பட்டு வந்தததும் தற்போது தெரியவந்துள்ளது. அவர் ஜம்முவில் பாஜக கட்சியின் சிறுபான்மை மோர்ச்சா பிரிவின் சமூக ஊடகப் பொறுப்பாளராகவும் இருந்து வந்துள்ளார்.

இன்று காலை ஜம்முவின் ரியாசி பகுதியில் உள்ள கிராம மக்களின் உதவியால் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ஒருவர் ரஜோரியைச் சேர்ந்த தாலிப் உசேன் மற்றொருவர் புல்வாமாவைச் சேர்ந்த பைசல் அகமது தார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாஜக சிறுபான்மை மோர்ச்சா ஜம்மு மாகாணத்தின் ஐடி மற்றும் சமூக ஊடகப் பொறுப்பாளர் பதவியில் இருந்து தாலிப் உசேன் இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்ததாக பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு ஏகே துப்பாக்கிகள், பல கையெறி குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

ஜம்முவின் ரியாசியில் தலிப் ஹுசைன் ஷா மற்றும் அவரது கூட்டாளிகள் கிராம மக்களால் சுற்றி வளைக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பதானியா கூறுகையில், இந்த கைது நடவடிக்கையால் “கட்சிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது..” என்று அவர் கூறினார்.

மே 9 அன்று, ஜம்மு மாகாணத்தில் கட்சியின் ஐடி மற்றும் சமூக ஊடகப் பொறுப்பாளராக தாலிப் உசேன் ஷாவை பாஜக நியமித்தது. பாஜக யாரையும் அத்தனை எளிதில் பொறுப்பில் அமர்த்துவது இல்லை, தற்போது பிடிபட்ட உடன் கட்சிக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லை, இவர் கட்சிக்குள் ஊடுருவ விரும்பியவர் என பாஜக வினர் கூறி வருகின்றனர் என்றும் இவர் 5 வருடங்களுக்கும் மேலாக பாஜக வில் இருந்துள்ளார், மோடிக்கு ஆதரவாக அயராது பிரச்சாரம் செய்தவராகவும், பாஜக வில் மும்முரமாக செயல்பட்டும் வந்தது குறித்த கேள்விக்கு சரியான பதில் இல்லை என விமர்சகர்கள் கேள்வி முன்வைகின்றனர்.

https://twitter.com/TimesNow/status/1543532587217461248

ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்திர ரெய்னா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களுடன் பயங்கரவாதி தலிப் ஹுசைன் நெருக்கமாக இருந்துள்ளதற்கு ஆதாரமாக பலரும் இருவரும் உள்ள புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

தாலிப் உசேன் பாஜக தலைவராக இருந்தததை ஒப்பு கொல்லும் பாஜக் நிர்வாகி

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோர் ரியாசி கிராம மக்களுக்கு ரொக்கப் பரிசு அறிவித்து அவர்களின் துணிச்சலைப் பாராட்டியுள்ளனர்.

Also Read: பாஜகவால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதிகளின் நீண்ட பட்டியயல் வெளியீடு

“ரியாசி மாவட்டத்தில் உள்ள துக்சான் கிராம மக்களின் தைரியத்திற்கு வாழ்த்துகள். இரண்டு #LeT பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் கிராம மக்களின் உதவியால் கைது செய்யப்பட்டனர்; 2AK #துப்பாக்கிகள், 7 #எறிகுண்டுகள் மற்றும் #துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கிராம மக்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும்” டிஜிபி அறிவித்துள்ளார் முகேஷ் சிங், ஜம்மு காவல்துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

“இரண்டு மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளை கைது செய்த துக்சன் தோக், ரியாசி கிராம மக்களின் துணிச்சலுக்கு நான் தலை வணங்குகிறேன். சாமானியர்களின் இத்தகைய உறுதியானது பயங்கரவாதத்தின் முடிவு வெகுதொலைவில் இல்லை என்பதைக் காட்டுகிறது.

பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டதற்காக கிராம மக்களுக்கு ₹ 5 லட்சம் ரொக்கப் பரிசு” வழங்க முடிவு செய்துள்ளதாக லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ​​ட்வீட் செய்துள்ளார்.

பொலிசாரின் கூற்றுப்படி, ரஜோரி மாவட்டத்தில் இரண்டு குண்டுவெடிப்புகள் மற்றும் ஒருவர் கொல்லப்பட்டதில் பாஜக வின் முன்னாள் தலைவருக்கு தாலிபுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்க பட்டு வந்த நிலையில் பீர் பஞ்சல் பகுதியின் லஷ்கர் இ தொய்பா வின் தளபதியாக இவர் செயல்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் ரஜோரியில் உள்ள கோட்ரங்கா பகுதியில் நடந்த சமீபத்திய குண்டுவெடிப்பு சம்பவங்களில் மூளையாக இவர் செயல்பட்டுள்ளதாகவும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது கையும் களவுமாக பிடிபட்ட உடன் உதய்பூர் சம்பவத்தில் ஈடுபட்ட ரியாஸை கழட்டி விட்டது போல தலிபையும் கழட்டி விட்டுள்ளது பாஜக என சமூக வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.