Lynchings Madhya Pradesh

ம.பி: 60 வயது பிர்தவ்ஸ் ஹாஜியார் அடித்து கொலை; பாசிச கும்பல் வெறியாட்டம்!

பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்திலுள்ளது அகோடியா நகரம், இங்கு வசிக்கும் 60 வயதான முதியவர் பிர்தௌஸ் ஹாஜி, இவர் அங்கு விஷேங்களுக்கு சமையல் செய்யும் தொழில் செய்து வருபவர்.

சம்பவத்தன்று இருவேறு மதத்தை சேர்ந்த இரு சிறுவர்களுக்கிடையே நடந்த சாதாரண விளையாட்டுச்சண்டை, முதியவர் தாக்கப்பட்டு இறக்கும் அளவிற்கு விபரீதமாகிவிட்டது. கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட சிறு சண்டைக்கு இதை சாக்காக வைத்து முஸ்லிம்களை குறி வைத்து தாக்கியுள்ளது பாசிச கும்பல். இதில் சமபந்தமே இல்லாமல் சமையல் வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த பிர்தௌஸ் ஷாஜியையும் தாக்கியுள்ளனர்.

https://twitter.com/SamiullahKhan__/status/1363464196361314305

சுமார் 200 பேர் குழுமிய அந்த கலவரத்தில் தாக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே என தெரிகிறது இதில் யூனுஸ் கபாடி என்பவரது காயலாங்கடையையும் அடித்து நொறுக்கி தீயிட்டுள்ளது அந்த வெறிப்பிடித்த கும்பல்.

சம்பந்தமில்லாத பிர்தௌஸ் ஹாஜி அநியாயமாக தாக்கப்பட்டு கால்கள் மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் பாம்பே பசாரில் உள்ள சிவாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் பத்து நாட்களாக தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த பிப்,20 அன்று உயிரிழந்துள்ளார்.

பிப்,9 ம் தேதி நடக்கப்பெற்ற இந்த மதக்கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார்? அவர்கள் கைது செய்யப்பட்டார்களா? இல்லை அவர்கள் மீது என்ன வழக்க பதியப்பட்டுள்ளது என்பதையல்லாம் அகோடியா நகர போலீஸ் தெரிவிக்க மறுக்கிறது என்கிறார் பிர்தௌஸ் ஹாஜியின் மருமகன் ஓசூன் பதான். பிர்தௌஸ் அவர்களை தலையில் கூறான ஆயுதம் கொண்டு ஒரு கும்பல் தாக்கியதாகவும் கண்ணால் பார்த்த சாட்சியாக ஒருவர் கூறுகிறார். ஆனாலும் யார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் இல்லை என்றார் அவர்.

எனினும் ரோஹித் என்ற இளைஞரை தாக்கியதாக கூறி அசார், சமீர், சோனு, பாய்லர் மற்றும் சபீர் ஆகிய முஸ்லிம் சிறுவர்களை கைது செய்துள்ளது காவல்துறை. உபி க்கு அடுத்த நிலையில் சிறுபான்மையினர் மிகவும் இன்னலுக்கு உள்ளாகி வாழும் மாநிலமாக பாஜக வின் ஷிவ்ராஜ் ஆளும் மத்திய பிரதேசம் மாறி வருகிறது என்கின்றனர் விமர்சகர்கள்.