Kashmir

உடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்தன- காஷ்மீரில் பயங்கரம் !

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வாக்களிக்க பட்ட சட்டப்பிரிவு 370ன் நீக்கம் தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழித்து கட்டி விட்டது என்று மத்திய அரசு கூறி வரும் வேலையில் சமீப காலமாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. காஷ்மீர் அமைதி பூங்காவாக உள்ளது என்று மோதி அரசாங்கம் கூறி வரும் வேலையில், ஐரோப்பா எம்பி க்கள் காஷ்மீர் சுற்று பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த செவ்வாயன்று (29-10-19) தெற்கு காஷ்மீரில் வேற்று மாநிலத்தை சேர்ந்த  6 தொழிலாளர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. இதில் காஷ்மீரி அல்லாத 6 நபர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுளளது.

இந்த தாக்குதலில் இருந்து தப்பிய ஒரே தொழிலாளி ஜஹிருதீன், “நான் எப்படி இப்போது  உயிருடன் இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார். சில அடையாளம் தெரியாத நபர்கள் தங்களின் தங்குமிடத்திற்கு வந்து அவர்களை அருகிலுள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர் , பின்னர்  ஒரே  வரிசையில் நிற்க வைத்து எங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். ஒன்றன்பின் ஒன்றாக உடல்கள் தரையில் விழத் தொடங்கின.”  என்று தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய ஜஹிருதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 வாரங்களில் இது 5 வது தாக்குதல் சம்பவமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.