BJP Modi West Bengal

மே.வங்கம்: மோடியின் பேரணியில் கலந்து கொள்வதற்கு 3 ரயில்களை 60 லச்சத்திற்கு புக்கிங் செய்த பாஜக !

இன்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் (படைப்பிரிவு-Brigade Rally) பேரணியில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்களை கொண்டு வந்து சேர்த்திட மூன்று யில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அலிபூர்துர், மால்டா மற்றும் ஹரிச்சந்திரபூரிலிருந்து முன்பதிவு செய்யப்பட்ட இந்த மூன்று ரயில்களை வாடகைக்கு எடுக்க பாஜக ரூ .60 லட்சத்திற்கு மேல் செலவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அலிபுர்துர் மற்றும் மால்டாவிலிருந்து சிறப்பு ரயில்கள் (22 பெட்டிகள் கொண்டவை) சனிக்கிழமை மாலை புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு ஹவுரா நிலையத்தை அடைந்தன. இந்த இரண்டு சிறப்பு ரயில்களின் வாடகை கட்டணம் முறையே ரூ .26 லட்சம் மற்றும் ரூ .22 லட்சம் ஆகும்.

ஹரிச்சந்திரபூரிலிருந்து மூன்றாவது சிறப்பு ரயில் (16 போகிகள் கொண்ட) சனிக்கிழமை மாலை புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை சீல்தா நிலையத்தை அடைகிறது. இந்த சிறப்பு ரயிலின் வாடகை கட்டணம் ரூ .18 லட்சம். இந்த ரயில் மூன்று இடங்களை அடைந்து, ஹவுரா மற்றும் சீல்டாவில் ஆகிய இரண்டு இடங்களிலும் 18 மணி நேரம் காத்திருக்கும், பிரதமர் பேரணி நிறைவடைந்த பின்னர் பாஜக ஆதரவாளர்களை அந்தந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லும்.

ஐ.ஆர்.சி.டி.சி வட்டாரங்களின் தகவலின்படி, சாதாரண சிறப்பு ரயில் கட்டணத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை செலுத்தி இந்த ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன எனவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் கொரோனா ஊரடங்கு காலத்தில் லச்சக்கணக்கான் ஏழை மக்களுக்கு எந்த விதமான போக்குவரத்து சேவைகளையும் ஏற்பாடு செய்யாமல் அவர்களை தவிக்க வைத்தது மோடி அரசு என தற்போது விமர்சனம் செய்யப்படுகிறது.